திருப்தியாக்கி நடத்துவார்
தேவைகளை சந்திப்பார்
மீதம் எடுக்க வைப்பார்
பிறருக்கு கொடுக்க வைப்பார்
பாடி கொணடடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்
1.
ஐந்து அப்பங்களை,
ஆயிரமாய் பெருகச்செய்தார்
ஐயாயிரம் ஆண்களுக்கு – பாடி
2.
பொன்னோடும் பொருளோடும்,
புறப்படச் செய்தாரே
பலவீனம்ன் இல்லாமலே,
பாதுகாத்து நடத்தினாரே ஒரு – பாடி
3.
காடைகள் வரவழைத்தார்,
மன்னாவால் உணவளித்தார்,
கற்பாறையை பிளந்து,
தண்ணீர்கள் ஓடச்செய்தார் – பாடி
4.
நீடிய ஆயுள் தந்து,
நிறைவோடு நடத்திடுவார்
முதிர் வயதானாலும்,
பசுமையாய் வாழ்ச் செய்தார் – பாடி
5.
கெம்பீர சத்ததோடு,
ஆரவார முழக்கத்தோடு
தெரிந்து கொண்ட தம் மக்களை
தினமும் நடத்தி சென்றார் – பாடி
6.
துதிக்கும்போதெல்லாம்,
சுவையான உணவு அது
ஆத்மா திருப்தியாகும்,
ஆனந்த ராகம் பிறக்கும், – பாடி